YRC Yoga

ஈரோடு வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ஈரோடு அரிமா சொசைட்டி (மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான) சிறப்பு பள்ளியில் யோகா பயிலரங்கம் 24.12.2024 அன்று காலை 7.00 முதல் 9.00 மணி வரை நடைபெற்றது. முன்னதாக வி.இ.டி கல்லூரியின் முதல்வர் முனைவர் வெ.ப. நல்லசாமி அவர்கள் தலைமையுரையும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் திட்ட அலுவலர் முனைவர் த. தினேஷ் அவர்கள் அறிமுகவுரையும் அப்பள்ளியின் பொறுப்பாளர் திரு.ஜமுனா அவர்கள் வரவேற்புரையும் வழங்கி நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.

வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் திருமூலர் யோகா மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா. தினேஷ்வரன் அவர்கள் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கான அடிப்படை யோகா பயிற்சிகளை "நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சிக்கான யோகா" என்னும் பொருண்மையில் உரை நிகழ்த்தி யோகா பயிற்சிகளைப் பயிற்றுவித்து சிறப்பித்தார். இதில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்.