Yoga Workshop
ஈரோடு, திண்டல் விஇடி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக 20.03.2025 வியாழக்கிழமை அன்று ஈரோடு மாவட்டம், வெள்ளோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு 'ஆரோக்கிய வாழ்வுக்கான யோகா" என்னும் தலைப்பில் சிறப்பு யோகா பயிலரங்கம் நடைபெற்றது. இதில் விஇடி கலை அறிவியல் கல்லூரியின் திருமூலர் யோகா மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா. தினேஷ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சிகள் மற்றும் ஆரோக்கிய வாழ்விற்காக நாம் கடைப்பிடிக்கக்கூடிய யோகாசன முறைகள் குறித்துப் பயிற்சி வழங்கினார். முன்னதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் திட்ட அலுவலர் முனைவர் த. தினேஷ் அவர்கள் வரவேற்புரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. N. தனபாக்கியம் அவர்கள் தலைமையுரையும் வழங்கி பயிலரங்கைத் தொடங்கி வைத்தனர். சிறப்பாக யோகாசனங்களைச் செய்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.